/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரியில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கு
/
கல்லுாரியில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கு
ADDED : செப் 24, 2024 04:26 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் இயற்பியல் ஆராய்ச்சியில் திருப்புமுனைகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் பிரபாவதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மேற்கு ஆப்ரிக்கா நாட்டின் டோகோவில் உள்ள லோம் பல்கலை இயற்பியல் துறை பேராசிரியர் மசாபலே பானெட்டோ பங்கேற்று சூரிய மின்கலங்களின் முக்கியத்தையும், சூரிய ஒளியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலை அரசு கலைக்கல்லுாரி இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் கருணாகரன் நானோ பொருள்களின் வழியாக செயல்திறனை மேம்படுத்தல் குறித்து பேசினார்.
கல்லுாரித் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் குறித்து விளக்கம் அளித்தனர். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் ராஜாத்தி, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் சானாஸ் பேசினர்.
நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா, இயற்பியல் துறை பேராசிரியர் சம்பத் பங்கேற்றனர்.