ADDED : ஜூன் 20, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: சர்வதேச யோகாசன தினத்தை முன்னிட்டு கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் யோகாசன தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் சேக் தாவூது தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேஷ் குமார் முன்னிலை வகித்தார். மின்னியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் பங்கேற்று பல்வேறு விதமான யோகா பயிற்சிகளை அளித்தார்.
ஏற்பாடுகளை என்.சி.சி., அலுவலர் மருதாச்சல மூர்த்தி, கடற்படை அலுவலர் வினோத் மற்றும் என்.எஸ்.எஸ்., அலுவலர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் செய்திருந்தனர்.