/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆம்புலன்ஸ் 108 பணிக்கு நேர்காணல்: 34 பேர் தேர்வு
/
ஆம்புலன்ஸ் 108 பணிக்கு நேர்காணல்: 34 பேர் தேர்வு
ADDED : டிச 08, 2024 06:27 AM

திருவாடானை : ஆம்புலன்ஸ் 108ல் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டது. மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் மருத்துவம் தொடர்பான படிப்புகள் படித்திருக்க வேண்டும்.
அதே போல் டிரைவர் பணிக்கு 24 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் அறிவிக்கப்பட்டது.
நேற்று திருவாடானை அரசு மருத்துவமனையில் இதற்கான நேர்காணல் நடந்தது. ஆம்புலன்ஸ் 108 மேலாளர் மோகன், ஒருங்கிணைப்பாளர்கள் சிவா, சவுந்தரராஜன் நேர்முக தேர்வை நடத்தினர். 91 பேர் கலந்து கொண்டனர். இதில் டிரைவருக்கு 23 பேரும், செவிலியர்கள் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.