/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆம்புலன்ஸ் 108ல் வேலை ஜன.18ல் நேர்முகத் தேர்வு
/
ஆம்புலன்ஸ் 108ல் வேலை ஜன.18ல் நேர்முகத் தேர்வு
ADDED : ஜன 16, 2025 04:50 AM
ராமநாதபுரம்: ஆம்புலன்ஸ் 108ல் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முதற்கட்ட நேர்முகத் தேர்வு நாளை மறுநாள் ( ஜன.18 ல்) பார்திபனுார் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடக்கிறது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறியிருப்பதாவது:
ஆம்புலன்ஸ் 108ல் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு பார்திபனுார் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஜன.18 காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., டி.எம்.எல்.டி., ஏ.என்.எம்., (பிளஸ் 2, பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்.
அல்லது லைப் சயின்ஸ் படிப்புகளான பி.எஸ்.பி., விலங்கியல், உயிரியல், வேதியியல், மைக்ரோ பயோலாஜிஇவற்றில் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறையானது முதலில் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை முதல் உதவி, செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவள துறையின் நேர்முகதேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, டிரைவிங் லைசன்ஸ் பெற்று 3 ஆண்டுகள் பேட்ஜ் எடுத்து ஒரு ஆண்டு முடிந்திருக்க வேண்டும். 24 முதல் 35 வயதிற்குள்ளவர்கள்அசல் சான்றிதழுடன் வர வேண்டும்.
விபரங்களுக்கு 87544 39544, 73974 44156, 73977 24828 என்ற அலைபேசி எண்ணிற்கு காலை 9:00 முதல் மாலை 6:00மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

