/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் செல்வாக்கு மிக்க ஒரே தலைவர் தேவர் பழனிசாமி பேட்டி
/
மக்கள் செல்வாக்கு மிக்க ஒரே தலைவர் தேவர் பழனிசாமி பேட்டி
மக்கள் செல்வாக்கு மிக்க ஒரே தலைவர் தேவர் பழனிசாமி பேட்டி
மக்கள் செல்வாக்கு மிக்க ஒரே தலைவர் தேவர் பழனிசாமி பேட்டி
ADDED : அக் 31, 2025 01:26 AM
கமுதி:  மக்கள் செல்வாக்கு மிக்க ஒரே தலைவராக இருந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்தார். சட்டசபையில் தேவர் உருவப்படத்தையும் திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் ஜெ., 13.5 கிலோ எடையில் தங்கக்கவசம் அணிவித்தார். தேவர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி சிறை சென்ற மாவீரர்.
அருப்புக்கோட்டை லோக்சபா தேர்தல், முதுகுளத்துார் சட்டசபை தொகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற மக்கள் செல்வாக்கு மிக்க ஒரே தலைவர் தேவர். அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரடியாக சந்தித்து தேவருக்கு  பாரத ரத்னா விருது வழங்க கடிதம் வழங்கியுள்ளோம் என்றார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  இணைந்து பசும்பொன் வருவது குறித்து கேட்டபோது, பிறகு கருத்து சொல்கிறேன் என்றார்.

