
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணிக்கு 78 பேர், ஒரு இரவுக் காவலர் பணிக்கு 27 பேர் என 105 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். நேற்று நடந்த நேர்க்காணலில் உதவியாளருக்கு 36 பேரும், இரவு காவலர் பணிக்கு 16 பேரும் பங்கேற்றனர்.
விண்ணப்பம் செய்ததில்50 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகினர். இந்நிலையில் விண்ணப்பித்திருந்தசில விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் குறித்த அழைப்பாணை கிடைக்கப்பெறாததால் நேர்காணல் கலந்து கொள்ள முடியவில்லை என புகார் தெரிவித்தனர்.