/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராம சபை கூட்டத்தில் மஞ்சள் பை அறிமுகம்
/
கிராம சபை கூட்டத்தில் மஞ்சள் பை அறிமுகம்
ADDED : ஜன 27, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : திருப்புல்லாணி ஒன்றியம்திணைக்குளம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக்கூட்டத்தில்மஞ்சள் பை அறிமுகம் செய்தனர்.
அரசுமேல்நிலைப்பள்ளி நல்லோர் வட்ட மாணிக்க மாணவர் அமைப்பு சார்பில், நற்பண்புகளை வளர்க்கும் நோக்கத்துடன் சமூக சேவை பாலிதீன் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள்
குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. வீடு தோறும் மஞ்சள் பை வழங்கஆலோசனை வழங்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் (பொ) ராமச்சந்திரன், புரவலர் ரபீக், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை சாந்தி, ஊராட்சித்தலைவி சிகப்பி, நல்லோர் வட்ட மாணிக்க மாணவர் திவாகர், மகாலட்சுமி, நிவேதா, ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் பங்கேற்றனர்.

