ADDED : மே 18, 2026 11:50 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் ஏட்டுகளுக்கு புலன் விசாரணை சம்பந்தமாக பயிற்சி வகுப்பு நடந்தது. டி.எஸ்.பி., சண்முகம் தலைமை வகித்தார். எஸ்.ஐ., சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். அப்போது தலைமை போலீசார் வாக்கு மூலங்கள் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்தும், வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம்.
சோதனை செய்யும் இடத்தில் நுழைந்து கைது செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முதுகுளத்துார், கடலாடி, பேரையூர் உள்ளிட்ட 7 ஸ்டேஷன்களில் இருந்து 43 தலைமை போலீசார் பங்கேற்றனர்.
