/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசுப்பணிக்கான போட்டித்தேர்வு இலவச பயிற்சி வகுப்பிற்கு அழைப்பு
/
அரசுப்பணிக்கான போட்டித்தேர்வு இலவச பயிற்சி வகுப்பிற்கு அழைப்பு
அரசுப்பணிக்கான போட்டித்தேர்வு இலவச பயிற்சி வகுப்பிற்கு அழைப்பு
அரசுப்பணிக்கான போட்டித்தேர்வு இலவச பயிற்சி வகுப்பிற்கு அழைப்பு
ADDED : மார் 20, 2025 07:04 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கூறியிருப்பதாவது:
மாநில, மத்திய அரசுப்பணிகளுக்காக விண்ணப்பித்து தயாராகி வரும் இளைஞர்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற அமைப்பின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நுால்கள், மாதாந்திர இதழ்கள், நாளிதழ்கள் அடங்கிய நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு பயின்ற பலர் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் பல்வேறு நிலைகளில் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு, குரூப் 4 தேர்விற்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் 25 முதல் வார நாட்களில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்க விரும்பும் போட்டித்தேர்வர்கள் தங்களது புகைப்படம், சுய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ, 04567- 230160 என்ற தொலைபேசியிலும், 73394 06320 என்ற அலைபேசியிலும் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து பயனடையலாம் என்றார்.