/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெற்றிலை பாக்கு வைத்து விழாவிற்கு அழைப்பு
/
வெற்றிலை பாக்கு வைத்து விழாவிற்கு அழைப்பு
ADDED : செப் 22, 2024 05:46 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி சர்ச் விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை பாக்குடன் விழா அழைப்பிதழ் கொடுத்து சுற்றுப்புற கிராம மக்களை செங்குடி கிராமத்தினர் விழாவிற்கு அழைத்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடியில் புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் அமைந்துள்ளது. இந்த சர்ச் விழா ஆண்டு தோறும் செப்.20ல் கொடியேற்றப்பட்டு 28 வரை நடைபெறும்.
நேற்று விழா கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்திற்கு வந்திருந்த சுற்றுப்புற கிராம மக்களுக்கு செங்குடி கிராமத்தார் சார்பில் வெற்றிலை பாக்குடன் தாம்பூலத்தில் விழா அழைப்பிதழ் கொடுத்து பாரம்பரிய முறைப்படி விழாவிற்கு அழைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் அருகில் உள்ள கிராமத்தினரை இவ்வாறு அழைப்பதை பரம்பரை பரம்பரையாக கடைப்பிடித்து வருவதாக செங்குடி மக்கள் தெரிவித்தனர்.