/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் கடை ஏலத்தில் முறைகேடு
/
புதிய பஸ் ஸ்டாண்ட் கடை ஏலத்தில் முறைகேடு
ADDED : ஆக 20, 2025 11:35 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் புதிய பஸ் ஸ்டாண்டில்உள்ள 18 கடைகள் டெண்டர் மற்றும் பொதுஏலம் விடப்பட்டது.
இதில், முன்னுரிமை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக வியாபாரி புகார் தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாரத்தில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் நகராட்சி சார்பில் ரூ.20 கோடியில் புதிய பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யும் பணிகள் முடியும் தருவாயில்உள்ளது. இவ்வளாகத்தில் உள்ள 99 கடைகளையும் டெண்டர்,பொதுஏலமிட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
இதில் முதற்கட்டமாக 81 கடைகள் கடந்த ஜூலை 17ல் ஏலமிடப்பட்டது.இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக நகராட்சியில் உள்ள சில கவுன்சிலர் களின் உறவினர்பெயரில் கடைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஏலத்தைரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க., பா.ஜ., புதியதமிழகம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்கீடுசெய்ய வேண்டும் வியாபாரிகள் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
அவ்வழக்கில் நீதிமன்றம் உத்தரவுபடி நேற்று ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில்கமிஷனர் அஜிதா பர்வின் தலைமையில் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள 18கடைகள் டெண்டர், பொதுஏலம் விடப்பட்டது.
ஏராளமானபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் டோக்கன்வைத்திருந்தநபர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு கடைகளுக்கு 10 முதல் 20க்குமேற்பட்ட வியாபாரிகள், அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வியாபாரி வாக்குவாதம் அப்போது கடை எண் 23க்கு நடந்தஏலத்தில் 21 பேர் பங்கேற்றனர். இதில் முன்னுரிமை அடிப்படையில் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்திற்கு ஒருவர் கேட்டார்.
அப்போது நாங்கள் 30 ஆண்டுகளாக கடைவைத்துள்ளோம் எங்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை. கடைகள் ஏலத்தில் முறைகேடு நடக்கிறது. பதில்தரவில்லை என்றால் நான் தீக்குளிப்பேன் என வியாபாரி பூமிநாதன் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டார்.
எல்லாமே வெளிப் படையாக சட்டவிதி களின்படி நடைபெறுகிறது என நகராட்சி அதிகாரிகள் கூறினர்.
செ.பூமிநாதன் கூறுகையில், எங்களுக்கு 30 ஆண்டுகள் பேக்கரிவைத்த முன்னுரிமை இருந்தும் கடை தரவில்லை. ஏலம்முறையாக நடக்கவில்லை.
வேறு பேப்பர் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை தந்துள்ளனர். இந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும், என்றார்.

