/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீணாகும் பாசன நீர்* பெரிய கண்மாயில் மடைகள் பராமரிப்பில்லை* 2-வது போக சாகுபடியில் விவசாயிகள் பாதிப்பு

ADDED : மார் 13, 2024 12:34 AM

ராமநாதபுரம், - ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தற்போது வரை தண்ணீர் உள்ளதால் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 2ம் போகமாக நெல், பருத்தி, பயறு வகை சாகுபடிப் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் பாசன மடைகள் பராமரிப்பின்றி தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கருங்குடியில் துவங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம் கொண்டதாக 2000 எக்டேரில் பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை நம்பி 3500 ஏக்கரில் நன்செய், புன்செய் சாகுபடி நடக்கிறது. குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. மண் மேவி மேடாகியுள்ளன. இதே போல வரத்து வாய்க்கால் மதகுகள் சேதமடைந்து வருகின்றன. சூரங்கோட்டை விவசாயி சக்திராஜன் கூறியதாவது:
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 1 முதல் 6 மடைகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் தண்ணீர் வீணாவது வாடிக்கையாகியுள்ளது. இவ்வாண்டு கண்மாயில் 3 அடி வரை தண்ணீர் உள்ளதால் 2ம் போகமாக நெல், பருத்தி, பயறு உள்ளிட்டவைகளை சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் தயராகி வருகின்றனர்.
இந்நிலையில் சேதமடைந்த மடைகள் வழியாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை நிறுத்தி மடைகளை சீரமைக்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான மடைகளின் வழியாக மட்டும் தண்ணீரை திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும் என்றார்.-----