/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வயதான தம்பதி தற்கொலைக்கு தனிமை மன அழுத்தம் காரணமா
/
வயதான தம்பதி தற்கொலைக்கு தனிமை மன அழுத்தம் காரணமா
ADDED : மே 04, 2025 01:23 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வயதான தம்பதி வீட்டில் தற்கொலை செய்த நிலையில் தனிமையில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
காட்டுப்பரமக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன் 75; கூட்டுறவு பால் பண்ணையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தனலட்சுமி 70.
இவர்களுக்கு 2 மகன்கள் , ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்ற நிலையில் வயதான தம்பதி வீட்டில் தனியாக இருந்துள்ளனர்
இந்நிலையில் ஏப்.,27 மகள் புனிதாவின் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் வீடு பூட்டியே கிடந்துள்ளது. மேலும் அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத மகள் மே 1 மாலை 4:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டப்பட்டிருந்தது.
கதவின் வழியாக ரத்தம் வடிந்த நிலையில் போலீசார் தம்பதி இருவரின் உடல்களையும் அழுகிய நிலையில் மீட்டனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் சாணி பவுடரை கரைத்து குடித்தது தெரிய வந்தது.
போலீசார் கூறுகையில் ''வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்து வருகின்றோம். வயது மூப்பு அடிப்படையில் தொடர்ந்து நம்மை யார் பார்த்துக் கொள்வது என்ற வேதனையில் தற்கொலை முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. மேலும் முழு விசாரணைக்கு பிறகே அதனை உறுதி செய்ய முடியும் என்றனர்.