/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி நீரில் கசிவா; உடனே சொல்லுங்க
/
காவிரி நீரில் கசிவா; உடனே சொல்லுங்க
ADDED : அக் 18, 2025 03:41 AM
கடலாடி: திருச்சியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலாடி மற்றும் முதுகுளத்துார் புறநகர் பகுதிகளில் காவிரி குடிநீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது தண்ணீர் கசிவு ஏற்பட்டு அப்பகுதியில் குளம் போல் தேங்குவது குறித்து பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
காவிரி நீர் பிரதான குழாயை சேதப்படுத்தும் விஷமிகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றும், சுற்றுவட்டார கிராமங்களுக்கு தண்ணீர் செல்லும் இடங்களில் குடிநீர் வீணாக வெளி யேறுதல் மற்றும் கசிவு ஏற்பட்டால் 97512 20022 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப் பாளர் பழனிக்குமார் தெரிவித்தார்.