நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8:15 மணி முதல் கனமழை பெய்தது.
ஒரு மாதத்திற்கும் மேலாக நெல் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இரவு பெய்த மழை நெல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. சில நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், அனைத்து பகுதிகளிலும் பெய்த கன மழையால் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

