ADDED : பிப் 26, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை அருகே அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலுர்துாவி அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா, நகரச்செயலாளர் பால்பாண்டி பங்கேற்றனர்.ராமநாதபுரம் புறநகர் போக்குவரத்து பணிமனை அருகே அண்ணா தொழிற்சங்கம் சார்பில், ஜெ.,படத்திற்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினர்.
அழகன்குளம் பஸ் ஸ்டாப் அருகே ஜெ., படத்திற்கு அ.தி.மு.க., கிளைச்செயலாளர் ஜெய்லானி உட்பட பலர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

