ADDED : பிப் 19, 2026 06:51 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: கோடை காலம் துவங்கவுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் பலாப்பழம் விற்பனை துவங்கியது.
தமிழகத்தில் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை உள்ள கோடை காலத்தில் பலாப்பழம் விற்பனைக்கு வரும். பண்ருட்டி, திண்டுக்கல், சிறுமலை பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குவதற்கு முன்பு சந்தைகளில் பலாப்பழம் விற்பனை துவங்கியுள்ளது.
ராமநாதபுரம் வாரச்சந்தை நேற்று நடந்தது. இதில் டன் கணக்கில் பலாப்பழம் குவிக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள் கூறுகையில், பலாப்பழம் சீசனுக்கு முன்பே விற்பனை துவங்கி விட்டது. தற்போது வரத்து குறைவாக உள்ளதால் கிலோ ரூ.50 க்கு விற்கப்படுகிறது. வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.
