/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ உண்ணாவிரதம்

ADDED : மார் 24, 2025 06:13 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு பழைய பென்ஷன் திட்டத்தினை அமல்படுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
பழைய பென்ஷன் திட்டம், சரண் விடுப்பு ஒப்படைப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில், ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சிவபாலன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்டத்தலைவர் விஜயராமலிங்கம், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத்தலைவர் பூப்பாண்டியன் உட்பட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ---------