/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி பேரூராட்சியில் ஜல்ஜீவன் திட்டம் துவக்கம்
/
தொண்டி பேரூராட்சியில் ஜல்ஜீவன் திட்டம் துவக்கம்
ADDED : அக் 05, 2024 03:55 AM
தொண்டி: தொண்டி பேரூராட்சியில் ஜல்ஜீவன் திட்டப் பணிகள் துவங்கியுள்ளது.
ஜல்ஜீவன் திட்டத்தில்வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. தொண்டி பேரூராட்சியில் நேற்று முதல்கட்டமாக குழாய் பதிக்கும் பணிகள் துவங்கியது. பேரூாட்சி தலைவர் ஷாஜகான்பானு துவக்கி வைத்தார்.துணை தலைவர் அழகுராணி, செயல்அலுவலர் ஹபீப்ராஜா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
வீட்டுக்கு வீடு குழாய் வழியே குடிநீர் திட்டத்தில் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் முழுமையடையும் பட்சத்தில் அன்றாட வீட்டு தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.