/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.ஆலங்குளத்தில் பழைய பைப் லைனில் ஜல்ஜீவன் திட்டப் பணிகள்
/
எஸ்.ஆலங்குளத்தில் பழைய பைப் லைனில் ஜல்ஜீவன் திட்டப் பணிகள்
எஸ்.ஆலங்குளத்தில் பழைய பைப் லைனில் ஜல்ஜீவன் திட்டப் பணிகள்
எஸ்.ஆலங்குளத்தில் பழைய பைப் லைனில் ஜல்ஜீவன் திட்டப் பணிகள்
ADDED : ஜூலை 17, 2025 11:13 PM
சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.வாகைக்குளம் ஊராட்சி எஸ்.ஆலங்குளத்தில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் பழைய பைப் லைனில் நடக்கிறது.
எஸ்.ஆலங்குளம் விவசாயி மூர்த்தி கூறியதாவது:
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மூலமாக புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் பதிக்க வேண்டும். ஆனால் இங்கு ஏற்கனவே இருக்கும் குழாய்கள் மூலமாக குடிநீர் இணைப்பு கொடுக்கின்றனர். இந்த நடைமுறை தவறானது.
கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் உரிய முறையில் ஆய்வு செய்து இத்திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதற்காக அமைக்கப்பட்ட குழாய்களில் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன் என்றார்.