/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை தாலுகாவில் மே 20ல் ஜமாபந்தி துவக்கம்
/
திருவாடானை தாலுகாவில் மே 20ல் ஜமாபந்தி துவக்கம்
ADDED : மே 13, 2025 12:25 AM
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் மே 20 ல் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணவேனி தலைமையில் ஜமாபந்தி துவங்க உள்ளது.
பொதுமக்கள் தங்கள் குறைகளை ஆன்--லைன் மூலமாக மனுக்களை பதிவு செய்து கொள்ளலாம் என தாசில்தார் ஆண்டி கூறினார்.
அவர் கூறியதாவது:- மே 20ல் மங்களக்குடி பிர்கா நெய்வயல், துத்தாகுடி, பழங்குளம், கடம்பூர், நீர்க்குன்றம், கட்டவிளாகம், பாகனுார், கூகுடி, மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை, கட்டிமங்கலம், பனிச்சகுடி, சித்தாமங்கலம், மே 21ல் புல்லுார் பிர்கா என்.எம்.மங்கலம், சிறுகம்பையூர், ஓரியூர், மருங்கூர், புல்லுார், ஆக்களூர், நகரிகாத்தான், மல்லனுார், வட்டாணம், கலியநகரி, மச்சூர், ஓடவயல், கொடிப்பங்கு, முத்துராமலிங்கபட்டினம் ஆகிய கிராம கணக்குகள் ஆய்வு செய்யப்படும்.
மே 23 ல் தொண்டி பிர்கா தேளூர், கருங்காலக்குடி, வேலங்குடி, தொண்டி, சின்னத்தொண்டி, தளிர்மருங்கூர், காடாங்குடி, செக்காந்திடல், கீழ அரும்பூர், பட்டமங்களம், குளத்துார், திருவெற்றியூர், கடம்பனேந்தல், முகிழ்த்தகம், நம்புதாளை, கானட்டாங்குடி, புதுப்பட்டினம், அ.மணக்குடி, ஆழிகுடி, ஆகிய கிராமங்களும், மே 27 ல் திருவாடானை பிர்கா ஆரசூர், ஆட்டூர், பாரூர், ஓரிக்கோட்டை, டி.நாகனி, இளையத்தான்வயல், பாண்டுகுடி, கிளியூர், அஞ்சுகோட்டை, கடம்பாகுடி, மாவூர், ஆதியூர் ஆகிய கிராம கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என்றார்.