ADDED : டிச 06, 2024 05:27 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., எட்டாம் ஆண்டு நினைவு நாள் ஆர்.எஸ்.மங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் சனவேலியில் நடந்தது.
ஜெ., உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
பொதுக்குழு உறுப்பினர் ராஜபாண்டி, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் சாகுல் ஹமீது, சனவேலி கிளைச் செயலாளர் கோட்டைச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் ஷாஜகான்.
மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞர் அணி செயலாளர் செய்யது இப்ராஹிம் அலி, மாவட்ட பிரதிநிதி முத்துகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் முருகேசன், அசோகன், ரவிச்சந்திரன், ராமசாமி, பாரி, ராமதாஸ், மணி, ஆசையன், ஜீவா, காந்தி, காளிமுத்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.