/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாலுகா அலுவலகத்தில் வீணாகும் ஜீப்
/
தாலுகா அலுவலகத்தில் வீணாகும் ஜீப்
ADDED : மார் 21, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை தாலுகா அலுவலகத்தில் பழுதாகி பயன்பாடில்லாமல் பழைய ஜீப் துருப்பிடித்து காட்சி பொருளாகியுள்ளது. வாகனத்தை ஏலம் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு வாகனம் நிறுத்தும் இடத்தில் ஜீப் துருப்பிடித்து பல ஆண்டுகளாக உள்ளது. தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு வேலையாக செல்பவர்கள் அந்த ஜீப்பை காட்சி பொருளாக இருப்பதை பார்த்து முகம் சுளிக்கின்றனர்.
திருவாடானை, தொண்டியில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் இதுபோன்று பயன்படாத வாகனங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை பயன்படுத்தவோ, அல்லது ஏலத்துக்கு விடவோ அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.