ADDED : பிப் 11, 2026 05:52 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தி.மு.க., அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., அ.தி.மு.க., வை சேர்ந்த மகளிர் பங்கேற்றனர். பா.ஜ., மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளையம்மாள் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மகளிர் அணி செயலாளர் லட்சுமி தேவி, மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தனர்.
மகளிர் அணி நிர்வாகிகள் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் மகளிருக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை. இலவசங்களை கொடுத்து விட்டு பெண்களை இழிவாக நடத்துகின்றனர். போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தாமல் அரசு வேடிக்கை பார்க்கிறது. இதனால் இரவில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்றனர்.
பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பொதுச்செயலாளர் குமார், அ.தி.மு.க., நகர செயலாளர் பால்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
