/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
/
வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : டிச 20, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து கல்லுாரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் பேசினார்.
இளம் தொழில்முறை மாதிரி வேலை வாய்ப்பு மையத்தின் தலைவி சுமதி, தொழில் முனைவோருக்கான பயிற்சியாளர் திருக்கோஷ்டியூர் மணிகண்டன், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூத் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கணிதத்துறை பேராசிரியர் விக்னேஷ் குமார் செய்திருந்தார்.