/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மன்னார் வளைகுடா கடலோரம் கடத்தலை தடுக்க கூட்டு ரோந்து
/
மன்னார் வளைகுடா கடலோரம் கடத்தலை தடுக்க கூட்டு ரோந்து
மன்னார் வளைகுடா கடலோரம் கடத்தலை தடுக்க கூட்டு ரோந்து
மன்னார் வளைகுடா கடலோரம் கடத்தலை தடுக்க கூட்டு ரோந்து
ADDED : ஜன 02, 2025 11:25 PM
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஒன்றியத்தில் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் அனைத்து துறைகள் சார்பில் கூட்டு ரோந்து அவசிய தேவையாக உள்ளது.
தனுஷ்கோடி முதல் ராமநாதபுரம் மாவட்ட எல்லைப் பகுதியான ரோஜ்மா நகர் வரை 130 கி.மீ.,க்கு பரந்து விரிந்த நிலையில் மன்னார் வளைகுடா கடற்கரை உள்ளது. மண்டபம், கீழக்கரை, சாயல்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட 21 தீவுகள் வரிசையாக அமைந்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் இலங்கைக்கு சட்ட விரோதமாக பீடி இலை பண்டல்கள், மஞ்சள் மூடை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் தங்கம் உள்ளிட்டவைகள் கடத்துவது அதிகரித்துள்ளது.
ஆள் நடமாட்டமில்லாத கடற்கரையை தேர்வு செய்து மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் மூலம் கடத்தலை அரங்கேற்றுகின்றனர். மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கடலில் அடிக்கடி ரோந்து சென்று கடத்தல் முயற்சியை முறியடிப்பதற்கு முற்பட வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறுகையில், சமீப காலமாக மன்னார் வளைகுடா கடற்கரையில் சட்டவிரோத கடத்தல் அதிகரித்துள்ளது. இவற்றை தடுக்க அனைத்து துறை சார்பில் கூட்டு ரோந்து அவசியத் தேவையாக உள்ளது.
மீன் வளத்துறை, மெரைன் போலீசார், போதை பொருள் தடுப்பு கடத்தல் நுண்ணறிவு போலீசார், மன்னார் வளைகுடா வனச்சரகத்தினர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
இதன் மூலம் இலங்கைக்கு சட்ட விரோத கடத்தல் படிப்படியாக குறையும் என்றனர்.

