/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடல் எல்லையில் கூட்டு ரோந்து: இந்தியா- இலங்கை ஆலோசனை
/
கடல் எல்லையில் கூட்டு ரோந்து: இந்தியா- இலங்கை ஆலோசனை
கடல் எல்லையில் கூட்டு ரோந்து: இந்தியா- இலங்கை ஆலோசனை
கடல் எல்லையில் கூட்டு ரோந்து: இந்தியா- இலங்கை ஆலோசனை
ADDED : நவ 13, 2024 11:10 PM

ராமநாதபுரம்; கொழும்புவில் நடந்த இந்திய கடலோர காவல்படை டைரக்டர் ஜெனரல்- இலங்கை கடற்படை அதிகாரிகள் கூட்டத்தில் இரு நாட்டுப்படையினரும் எல்லைப்பகுதியில்
கூட்டு ரோந்து சென்று கடத்தலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்திய-ா- இலங்கை இடையே தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்கிறது. இருநாடுகளின் கடற்பகுதியும் குறைந்த துாரத்தில் இருப்பதால் சட்ட விரோதமாக போதை பொருட்கள் கடத்தல், தங்கம் கடத்தல் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இரு தரப்பு கடற்படை, கடலோர காவல் படையினரும் இவற்றை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் பரமேஷ் சிவமணியும், இலங்கை கடற்படை வைஸ் அட்மிரல் பிரியந்தா பெரைரா ஆகியோர் சந்திப்பு கொழும்புவில் நடந்தது.இதில் இரு நாடுகளின் கடல் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது. கடல் பகுதியில் நடக்கும் கடத்தல், குற்றச் செயல்களை தடுப்பது குறித்து இரு நாட்டு வீரர்கள் அடங்கிய கூட்டு ரோந்து எல்லைப்பகுதியில் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கையின் கடலோர காவல்படை டைரக்டர் ஜெனரல் ரியர் அட்மிரல் ராஜபிரிய செரசிங்கே, கொழும்புவில் உள்ள இந்திய ைஹகமிஷன் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஆனந்த் முகுந்தன் உடனிருந்தனர்.