/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்றனர்

ADDED : ஜன 13, 2024 04:47 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற பணியாளர்கள் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல்விழாவில் நீதிபதிகள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு கூடுதல் மாவட்ட நீதிபதி கோபிநாத் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி கதிரவன், மாஜிஸ்திரேட்டுகள் நிலவேஸ்வரன், பிரபாகரன், மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி வெர்ஜின்வெஸ்டா முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர்கள் சங்கதலைவர் ேஷக் இப்ராஹிம், செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு, துணைத்தலைவர் மாதவன், மூத்த வழக்கறிஞர்கள் குணசேகரன், ரவிச்சந்திர ராமவன்னி,வடிவேல், நம்புநாயகம், அரசு வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், கேசவன் உட்படவழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
பொங்கல் வைத்து வழிபாடு செய்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதே போல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த பொங்கல் விழாவிலும் அனைத்து நீதிபதிகளும் பங்கேற்றனர்.