/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகள் பங்கேற்பு
/
சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகள் பங்கேற்பு
ADDED : ஜன 24, 2025 04:20 AM
பரமக்குடி: பரமக்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் பொது மக்களுக்கு நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதிகள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான் உத்தரவில் பரமக்குடி வட்ட சட்டப் பணிக் குழு சார்பில் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் முகாம் நடந்தது. அப்போது வட்ட சட்டப் பணிகள் குழுவின் செயல்பாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
பரமக்குடி சார்பு நீதிபதி சதீஷ், குற்றவியல் நீதிபதி பாண்டி மகாராஜா பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர். அதில் சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் பிரச்னைகள், குற்றவியல் வழக்குகள், ஜாமினில் வெளிவருதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ள, ஜீவனாம்சம் பெற மற்றும் தொழிலாளர்களுக்கான பிரச்னைகள் குறித்து வட்ட சட்டப்பணி குழுவை அணுகலாம்.
மேலும் அறிந்து கொள்ள கட்டணமில்லா அலைபேசி எண் 1800 425 2441ல் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
தாசில்தார் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சட்ட தன்னார்வலர் முருகேசன், சங்கர் செய்திருந்தனர்.