/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜூடோ போட்டி: பரமக்குடி சவுராஷ்டிரா பள்ளி மாணவர்கள் 14 பதக்கம் வென்றனர் 6 பேர் மாநில போட்டிக்கு தகுதி

ADDED : டிச 06, 2024 05:17 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டிகளில் பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 பேர் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இதில் 6 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவில் நடந்த ஜூடோ போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 பதக்கங்களை பெற்றனர்.
இதன்படி 6 தங்கம், 6 வெள்ளி, மற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்றனர். தங்கம் வென்ற மாணவர்கள் 2025 ஜன., மாதம் கன்னியாகுமரியில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். மாணவர்களை கல்விக் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் ரெங்கன், தலைமை ஆசிரியர் நாகராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.