/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடைகாலத்தில் துவங்கும் ஜூஸ் கடைகள்: அதிகாரிகள் ஆய்வு தேவை
/
கோடைகாலத்தில் துவங்கும் ஜூஸ் கடைகள்: அதிகாரிகள் ஆய்வு தேவை
கோடைகாலத்தில் துவங்கும் ஜூஸ் கடைகள்: அதிகாரிகள் ஆய்வு தேவை
கோடைகாலத்தில் துவங்கும் ஜூஸ் கடைகள்: அதிகாரிகள் ஆய்வு தேவை
ADDED : மார் 17, 2025 08:03 AM
தொண்டி,: கோடைகாலங்களில் துவங்கும் ஜூஸ் கடைகளை உணவுபாதுகாப்புத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.
கோடை காலம் துவங்கியதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து அடிக்கடி நீராதாரங்கள் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வெளியூர் செல்பவர்கள் ரோட்டோரங்களில் விற்கும் ஜூஸ் கடைகளில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை வாங்கி குடிக்கின்றனர்.
இதனால் திருவாடானை, தொண்டி, நம்புதாளை, சின்னக்கீரமங்கலம், எஸ்.பி.பட்டினம் போன்ற பல்வேறு ஊர்களில் ரோட்டோரங்களில் ஏராளமான வியாபாரிகள் புதிதாக இளநீர், சர்பத் போன்ற குளிர்பானங்களை விற்கின்றனர்.
இவர்கள் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் ரோட்டோரங்களில் திறந்தவெளியில் இருப்பதால் மணல் துகள்கள், துாசிகள் படிந்து சுகாதாரமில்லாமல் உள்ளது.
இதோடு அதிகளவில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கும் நிலையும் உள்ளது. இதை வாங்கி குடிக்கும் வாகன ஓட்டிகள், மக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
எனவே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரோட்டோரங்களில் ஜூஸ் கடைகளை ஆய்வு செய்து தரமற்ற குளிர்பானங்கள் விற்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.