/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
108 'ஆப்'பில் அழைத்தால் போதும்: உடனடியாக மருத்துவ சேவையை பெறலாம்
/
108 'ஆப்'பில் அழைத்தால் போதும்: உடனடியாக மருத்துவ சேவையை பெறலாம்
108 'ஆப்'பில் அழைத்தால் போதும்: உடனடியாக மருத்துவ சேவையை பெறலாம்
108 'ஆப்'பில் அழைத்தால் போதும்: உடனடியாக மருத்துவ சேவையை பெறலாம்
ADDED : ஜன 28, 2025 05:23 AM
2024 ஜன., முதல் டிச., வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 228 பேர் 108 சேவை மூலம் பயன்பெற்றுள்ளனர். சென்ற ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். 108 சேவையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை 7520 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் 11 ஆயிரத்து 756 கர்ப்பிணிகள் பிரசவத்திற்கும்,  இதயம் சம்பந்தமான நோயாளிகள் 2356 பேரும் பயன்படுத்தி உள்ளனர்.கிராமம், டவுன் பகுதிகளில் 108 சேவைக்காக அழைப்பவர்களுக்கு சேவை சராசரியாக 12 நிமிடங்களில் அளிக்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் 2 முதல் 4 கி.மீ., ஒரு வாகனம் மற்றும்கிராமங்களில் சராசரியாக 12 முதல் 15 கி.மீ.,ல் ஒரு வாகனம் செயல்பாட்டில் உள்ளன.தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது இரவு நேரங்களில் நாம் சென்று கொண்டிருக்கும் இடத்தை கண்டறிவதில் சிரமம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அவசரம் 108 என்ற ஆப் வசதி மூலம் அழைக்கும் போது அவர்கள்இருக்கும் இடத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. அழைக்கும் இடத்தை தானாகவே அவசர சேவை மையத்திற்கு ஜி.பி.எஸ்., மூலம் கண்டறியும் வசதி உள்ளது.
ஆம்புலன்ஸ் 108ல் நன்கு பயிற்சி பெற்ற வாகன ஓட்டுனர் மற்றும் அவசர தொழில்நுட்ப வல்லுனர் என இருவர் எப்போதும் பணியில் உள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் நோயாளிக்கு காயத்திற்கு கட்டு போடுதல், ஆக்சிஜன் வழங்குதல் போன்ற முதலுதவி சிகிச்சைகளை வழங்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
'கோல்டன் ஹவர்' என்று சொல்லக்கூடிய முதல் ஒரு மணி நேரத்தில் தரக்கூடிய அவசியமான மருத்துவ முதலுதவி நோயாளிக்கு கிடைக்கிறது.
108 அவசர வாகனத்தில் பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு வசதியாக இன்குபேட்டர் வசதியுடன் கூடிய வாகனம் மாவட்ட தலைநகரம் மற்றும் அடுத்த பெரிய நகரங்களில் நிறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனை அவசர தீவிர சிகிச்சை மையத்தில் உள்ள வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட நோயாளியை கூட மற்ற உயர் சிகிச்சை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு தேவையான வென்டிலேட்டர் மற்றும் டெபிலேட்டர் போன்ற வசதியுடன் கூடிய அதிநவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளடக்கிய வாகனம் அனைத்து பெரிய நகரங்களிலும் செயல்பாட்டில் உள்ளது, என ஆம்புலன்ஸ் 108ன் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் தெரிவித்தார்.

