/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கச்சத்தீவுக்கு 100 படகுகளில் பயணத்திற்கு பக்தர்கள் ஆர்வம்
/
கச்சத்தீவுக்கு 100 படகுகளில் பயணத்திற்கு பக்தர்கள் ஆர்வம்
கச்சத்தீவுக்கு 100 படகுகளில் பயணத்திற்கு பக்தர்கள் ஆர்வம்
கச்சத்தீவுக்கு 100 படகுகளில் பயணத்திற்கு பக்தர்கள் ஆர்வம்
ADDED : பிப் 08, 2025 01:26 AM
ராமேஸ்வரம்:கச்சத்தீவு திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 100 படகுகளில் செல்ல வாய்ப்பு உள்ளதால் விருப்ப மனுக்களை பக்தர்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 21 கி.மீ.,ல் பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள இலங்கை கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 14, 15ல் நடக்க உள்ளது. இவ்விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகு, நாட்டுப்படகில் 3000 பக்தர்கள் செல்கின்றனர்.
இந்த ஆண்டு மார்ச் 14ல் ராமேஸ்வரத்தில் இருந்து 80 விசைப்படகுகள், 20 நாட்டுப்படகுகளில் 3500 பக்தர்கள் செல்ல வாய்ப்பு உள்ளது.
இதற்கான விருப்ப மனு கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரம் வேர்க்கோட்டில் உள்ள சர்ச் வளாகத்தில் வழங்கப்படுகிறது.
இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு நபருக்கு படகு கட்டணம் ரூ.2000 ஆகும். வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதி போலீஸ் ஸ்டேஷனில் குற்றவழக்கு இல்லை என சான்றிதழ் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ராமேஸ்வரம் சர்ச் பாதிரியார் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இதனை திருவிழா வழிபாட்டு குழு இறுதி செய்து அனுமதி வழங்கும்.