/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் கால பைரவ அஷ்டமி விழா கோலாகலம்
/
பரமக்குடியில் கால பைரவ அஷ்டமி விழா கோலாகலம்
ADDED : டிச 24, 2024 04:24 AM

பரமக்குடி: அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய கால பைரவ அஷ்டமி விழாவில் பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் சுவாமி, அம்பாள் உட்பட பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்தனர்.
பரமக்குடியில் மார்கழி மகா உற்ஸவம் துவங்கி நடந்து வருகிறது. தினமும் சிவன் கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை பாடப்படுகிறது.நேற்று கால பைரவ அஷ்டமி விழாவையொட்டி பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்தது.
பின்னர் மகா பூர்ணாகுதி நடந்தது. மூலவர் சந்திரசேகர சுவாமி, விசாலாச்சி அம்பிகைக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 10:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி பிரியாவிடையுடனும், விசாலாட்சி அம்பிகை அலங்காரமாகி தனித்தனியாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.
அப்போது விநாயகர், முருகன் முன் செல்ல பஞ்ச மூர்த்திகள் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய லீலையில் பக்தர்களுக்கு அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு கோயிலை அடைந்த பின் இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனையுடன் விழா நிறைவடைந்தது.
*இதே போல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் மற்றும் நயினார்கோவில் நாகநாத சுவாமி உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.