/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காமன் பண்டிகை விழா கோலாகலம்; மன்மதனை சிவன் எரித்த கதை
/
காமன் பண்டிகை விழா கோலாகலம்; மன்மதனை சிவன் எரித்த கதை
காமன் பண்டிகை விழா கோலாகலம்; மன்மதனை சிவன் எரித்த கதை
காமன் பண்டிகை விழா கோலாகலம்; மன்மதனை சிவன் எரித்த கதை
ADDED : மார் 16, 2025 12:28 AM

பரமக்குடி; பரமக்குடி பகுதிகளில் மன்மதனை சிவன் எரித்த காமன் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பழந்தமிழர்களின் பண்டிகைகளில் ஒன்றாக காம தகனம் எனப்படும் காமன் பண்டிகை விழா உள்ளது. சிவபெருமானின் தவத்தை கலைக்க பார்வதியால் அனுப்பப்பட்ட மன்மதன் எனப்படும் காமதேவன் மலர் அம்புகளால் கணை தொடுப்பார்.
அப்போது சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணால் காமதேவனை எரித்து சாம்பலாக்கினார். தொடர்ந்து மன்மதனின் மனைவி ரதி சிவபெருமானிடம் முறையிட்டு கணவனை உயிர்பிக்க வேண்டினார்.
இந்த நிகழ்வையொட்டி பரமக்குடி, எமனேஸ்வரம் உட்பட அனைத்து புறநகர் பகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தெரு முனை சந்திப்புகளில் மரங்களை நட்டு வைத்து பூஜை செய்தனர். ஒவ்வொரு நாளும் பாடல்கள் பாடப்பட்டு ரதி, மன்மதன் திருக்கல்யாணம் உட்பட மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து மார்ச் 13 இரவு 12:00 மணிக்கு காமனை எரிக்கும் நிகழ்வும், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு காமனை எழுப்பும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. அப்போது ஆண்கள் ரதி, மன்மதன், சிவன் உட்பட பல்வேறு கடவுள்களின் வேடமிட்டு மகிழ்ந்தனர்.
இதனையொட்டி அனைத்து பகுதிகளில் உள்ள மக்களும் தரிசித்து கோலாகலமாக கொண்டாடினர்.