/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி, சிக்கலில் தேசியக்கொடி ஊர்வலம்
/
கமுதி, சிக்கலில் தேசியக்கொடி ஊர்வலம்
ADDED : மே 28, 2025 11:15 PM

கமுதி: ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடவும், ராணுவ வீரர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி சார்பில் கமுதி, சிக்கலில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது.
கமுதி எட்டுக்கண் பாலம் அருகே துவங்கி பஸ் ஸ்டாண்ட், பஜார், பேரூராட்சி அலுவலகம் உட்பட முக்கிய வீதிகள் வழியாக சந்தைப்பேட்டை அருகே நிறைவடைந்தது.
இதில் பா.ஜ.,மாநில இளைஞரணி செயலாளர் ராம்குமார், கமுதி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் வேலவன், மத்திய ஒன்றிய தலைவர் பூபதிராஜா.
மாவட்ட துணைத் தலைவர் கணபதி, அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கருமலையான், ஒன்றிய அவைத்தலைவர் சேகரன், பன்னீர்செல்வம் அணி ஒன்றிய செயலாளர் கருப்புமுருகேசன் உட்பட தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
*சிக்கல் நகரில் கடலாடி கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் இந்திய ராணுவ வீரர்களின் வீர தீரத்தை பாராட்டியும், மத்திய அரசு மற்றும் பிரதமரின் நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தும் தேசியக்கொடி ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கிழக்கு ஒன்றிய தலைவர் சிக்கல் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ரமேஷ் பாபு, முருகேசன், வழக்கறிஞர் பேய்க்குளம் முருகேசன் உட்பட பா.ஜ., நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். சிக்கல் நகர் பகுதிகளில் ஊர்வலமாக கோஷங்களை முழங்கியபடி வந்தனர்.