/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுற்றுலா பயணிகளை கவரும் காஞ்சிரங்குடி தர்கா கடற்கரை
/
சுற்றுலா பயணிகளை கவரும் காஞ்சிரங்குடி தர்கா கடற்கரை
சுற்றுலா பயணிகளை கவரும் காஞ்சிரங்குடி தர்கா கடற்கரை
சுற்றுலா பயணிகளை கவரும் காஞ்சிரங்குடி தர்கா கடற்கரை
ADDED : ஜன 16, 2025 05:00 AM

கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மகான் பக்கீரப்பா தர்கா மன்னார் வளைகுடா கடற்கரையோரத்தில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.
கீழக்கரையில் இருந்து 5 கி.மீ.,ல் உள்ள காஞ்சிரங்குடி கடற்கரையோரப் பகுதி 8 சதுர கி.மீ., அளவிற்கு கடற்கரையை ஒட்டிய தென்னந்தோப்புகள் நிறைந்த பகுதியாகும்.
மகான் பக்கீரப்பா ஒலியுல்லா தர்கா அருகே உள்ள கடற்கரைக்கு நாள்தோறும் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பொதுமக்களும் யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.
கடற்கரையை ஒட்டி கடற்பாறைகள் குறிப்பிட்ட அளவு தொலைவிற்கு இயற்கையாக உள்ளன.
கடற்பாறையில் பட்டு தெறிக்கும் அலைகளையும், ஆழமில்லாத பகுதிகளில் குளிப்பதற்கும் ஏற்ற இடமாக உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
மகான் பக்கீரப்பா தர்கா அருகே உள்ள கடற்கரைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பொழுது போக்கி செல்லுகின்றனர். இங்கு தென்னை, மா, சப்போட்டா, முந்திரி உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் உள்ளன.
இயற்கை எழில் சூழ்ந்த பொழுது போக்கும் அம்சங்களுடன் உள்ளதால் ஏராளமானோர் விடுமுறையை கழிப்பதற்கு இங்கு வருகின்றனர் என்றனர்.