/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இருளில் மூழ்கியுள்ளது காஞ்சிரங்குடி ஊராட்சி கண்டுகொள்ளாத நிர்வாகம்
/
இருளில் மூழ்கியுள்ளது காஞ்சிரங்குடி ஊராட்சி கண்டுகொள்ளாத நிர்வாகம்
இருளில் மூழ்கியுள்ளது காஞ்சிரங்குடி ஊராட்சி கண்டுகொள்ளாத நிர்வாகம்
இருளில் மூழ்கியுள்ளது காஞ்சிரங்குடி ஊராட்சி கண்டுகொள்ளாத நிர்வாகம்
ADDED : மே 18, 2025 12:13 AM
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சியில் மூன்று மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கிய நிலையில் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.
காஞ்சிரங்குடி ஊராட்சி செங்கழுநீரோடை, இடிந்தகல் புதுார், அலவாய்க்கரைவாடி, சிவகாமிபுரம், கிருஷ்ணாபுரம், பக்கீரப்பா தர்கா உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்களில் தெருவிளக்குகள் எரியாமல் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.
காஞ்சிரங்குடி ஊராட்சியில் 6000த்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். தெருக்களுக்கு செல்லும் பாதை மற்றும் சாலையோரங்களில் மின்கம்பங்களில் மின்விளக்கின்றி உள்ளதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காஞ்சிரங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் முனியசாமி கூறியதாவது: மூன்று மாதங்களுக்கும் மேலாக மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது.
கீழக்கரைக்கு செல்லும் பிரதான சாலை மற்றும் திருப்புல்லாணி செல்லும் சாலை வழிநெடுகிலும் வெளிச்சமின்றி காணப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே காஞ்சிரங்குடி ஊராட்சிக்கான தனி அலுவலர் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.