
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: -: பரமக்குடி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நடக்கும் நிலையில் அக்., 28ல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா அக்., 22 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினம் சுவாமி இரவு பல்வேறு அலங்காரங்களில் அருள்பாளிக்கிறார்.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்., 27 இரவு 7:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து மறுநாள் காலை 10:45 மணிக்கு மேல் தெய்வானை, சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதேபோல் பாரதி நகர் மற்றும் பால்பண்ணை எதிரில் உள்ள முருகன் கோயில்களில் சஷ்டி விழா நடக்கிறது.

