
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே கல்லுார் பாரதிநகரில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சிக் கலயம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
கல்லுார் விநாயகர் கோயிலில் இருந்து புறபட்ட கஞ்சி கலயம் ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று ஆதி பராசக்தி கோயிலை வந்தடைந்தது.
அதிக மழை பெய்து குடிநீர் பஞ்சம் தீர்ந்து, விவசாயம் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலில் நடந்த இந்த கஞ்சிக்கலய ஊர்வலத்தில் பெண்கள் சிலர் அக்னிசட்டி எடுத்துவந்தனர். அனைவருக்கும் கஞ்சி வழங்கபட்டது.