ADDED : ஜூலை 07, 2025 11:28 PM

ராமநாதபுரம்,: ராநாதபுரம் வெளிபட்டணம் யாதவர் தெருவில் உள்ள யாதவ மகாசபைக்கு பாத்தியமான கண்ணன் கோயிலில் நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு ஜூலை 6 ல் கணபதி ேஹாமத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று (ஜூலை 7) 2ம் கால யாகபூஜையுடன் காலையில் யாகசலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
மூலவர் கண்ணன், பரிவார தெய்வங்களுக்கு புனித கும்பநீரால் அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கபட்டது.
கும்பாபிஷேக விழாவில் யாதவா மகா சபை பொதுச் செயலாளர் வேலு மனோகரன், வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் பால்ராஜ், நகராட்சி தலைவர் கார்மேகம், அ.தி.மு.க., நகரச் செயலாளர் பால்பாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைச்சாமி, யாதவர் சங்கத் தலைவர் நவநீதகிருஷ்ணன், செயலாளர் வன்னிய ராஜன், பொருளாளர் நாகராஜன், துணைத்தலைவர் மதிவாணன்.
யாதவர் சங்க நிர்வாகி ரமேஷ், அ.தி.மு.க., ஜெ., பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சைனா பாஸ்கரன், என்.டெக்ஸ் ரவி, நெடுஞ்சாலைத் துறை மதியழகன், குணசேகரன், நியூ சமத்துவம் வாட்டர் சப்ளை கண்ணன், அ.தி.மு.க. 30வது வார்டு செயலாளர் கோகுலகிருஷ்ணன், மாலா ரேடியோஸ் மணி, சன் சோலார் பவர் சிஸ்டம் கண்ணன், சி.டி.சி., டிராவல்ஸ் குமார்.
கண்ணா ஏஜென்சி சரவணன், குமரன் பார்மசி பாலமுருகன், எல். பி., கன்ஸ்ட்ரக்சன் பிரசாத், சபரி கன்ஸ்ட்ரக்சன் சபரி மணிகண்டன், தி.மு.க. நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாரீஸ்வரன், நெடுஞ்சாலைத்துறை நாகராஜ், சர்மிளா மல்டி கலர் ஆப்செட் அசோக் குமார், என். பி.வி., பேப்பர் டைல்ஸ் பழனி குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.----