/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கன்னியாகுமரி மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன் மண்டல தீயணைப்பு போட்டிகளில்

ADDED : ஜன 31, 2024 01:23 AM
ராமநாதபுரம்:-ராமநாதபுரத்தில் நடந்த தென் மண்டல தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. திருநெல்வேலி இரண்டாம் இடம் பெற்றது.
தீயணைப்புத்துறை தென் மண்டலத்தை சேர்ந்த மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
துணை இயக்குநர் விஜயகுமார் தலைமை வகித்தார். டி.ஐ.ஜி., துரை போட்டிகளை துவக்கி வைத்தார். துறை ரீதியான போட்டிகள், ஏணிப்பயிற்சி, கயிறு ஏறுதல், அணிப்பயிற்சி, கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
இதில் அதிக புள்ளிகளை பெற்று கன்னியாகுமரி மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. திருநெல்வேலி மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கினார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்பாஸ் செய்திருந்தார்.------