நவீன வசதிகளுடன் செயல்படும் செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி
நவீன வசதிகளுடன் செயல்படும் செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி
UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 04:31 AM

ரா மநாதபுரம் பேராவூரில் டாக்டர் இ.எம்.அப்துல்லா அறக்கட்டளை நடத்தும் செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி நவீன வசதிகளுடன் செயல்படுகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.சி.,) திட்டத்தில் செயல்படும் செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளியில் மனப்பாடக் கல்வியை தாண்டி புதுமையான முறையில் கற்பிக்கப்படுகிறது.
பாடங்களை எளிதில் புரிய வைக்கும் நவீன ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகள், ஏ.ஐ., சார்ந்த கற்றல் பயிற்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜெ.இ.இ., நீட் தேர்வுக்கான அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் 480 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் 100 சதவீதமும், 470 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் 50 சதவீதமும், 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் 25 சதவீதமும் பருவக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.
பயிற்சிபெற்ற ஆசிரியர் குழு, ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகள், நவீன அறிவியல் ஆய்வகம், மொழி ஆய்வகம், பாரதிதாசன் பல்கலை சான்றிதழ் கணிணிப் பயிற்சி, ஆங்கில திறன் பயிற்சி, சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகள், களப்பயணங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
மாணவர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா, வாசிப்பு பழக்கத்தை உருவாக்க நுாலகம், விளையாட்டு மைதானங்கள் உள்ளன. மாணவர்களின் திறமையை கண்டறிந்து அதற்கேற்ப வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
விளையாட்டு, இசை, நடனம், ஓவியம், யோகா, ஸ்கேட்டிங், சிலம்பம், உள்ளிட்ட தற்காப்பு கலைகள், அரபிக் வகுப்புகள் உள்ளன. சிறந்த பண்பாடு, சீரான கட்டுப்பாடு, உயரிய கல்வி அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கிறது.
ராமநாதபுரம் அருகே பேராவூர் மதுரை-–மண்டபம் பைபாஸ் ரோட்டில் பள்ளி அமைந்துள்ளது. தொடர்புக்கு: அலைபேசி 83008 29336, மின்னஞ்சல் sapscbse17@gmail.com, இணையதளம் - www.syedammalpublicschool.com.
