/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கார்த்திகை தீப விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
/
கார்த்திகை தீப விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
ADDED : டிச 07, 2024 05:50 AM

கீழக்கரை: கீழக்கரை தட்டான்தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
நேற்று காலை 9:00 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடிப் பட்டம் ஏற்றி காப்பு கட்டுதல் நடந்தது. மூலவர் வழிகாட்டி பாலமுருகனுக்கு 11 வகை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. டிச.13 காலை 6:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
கோயில் விமான கலசம் அருகே உள்ள 36 அடி உயரமுள்ள இரும்பு பீடத்தில் 100 கிலோ நெய், 15 கிலோ நுால் திரி, 10 கிலோ சூடம் உள்ளிட்டவற்றால் மூன்று நாட்களுக்கு மிகாமல் எரியும் வகையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து கார்த்திகை தீபம் வரை மாலை 6.30 முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஹிந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.