/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கார்த்திகை தீப விழா இன்று பாஞ்சராத்ர தீபம்
/
கார்த்திகை தீப விழா இன்று பாஞ்சராத்ர தீபம்
ADDED : டிச 15, 2024 08:57 AM

பரமக்குடி : பரமக்குடியில் இன்று பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ர தீப விழா நடக்கிறது.
பரமக்குடியில் நேற்று முன்தினம் மாலை அனைத்து கோயில்களிலும் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடந்தது. விசாலாட்சி அம்பிகா ஈஸ்வரன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு இரவு 9:00 மணிக்கு சுவாமி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்தனர். கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், தரைப்பாலம் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கோயில், செந்தில் ஆண்டவர் கோயில்களில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று இரவு பரமக்குடி சுந்தரராஜ பெருமாள், எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ர தீப விழா நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு சொக்கப்பனை எரிக்கப்படும்.
திருவாடானை
ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் முருகன் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் வெள்ளிக் கவசத்தில் அலங்கரிக்கப்பட்டார். கோயில் முன் அமைந்துள்ள தெப்பக்குளம் அருகே சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.