/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நவ.17 முதல் கார்த்திகை விரதம்: ஐயப்ப பக்தர்கள் வேண்டுகோள்
/
நவ.17 முதல் கார்த்திகை விரதம்: ஐயப்ப பக்தர்கள் வேண்டுகோள்
நவ.17 முதல் கார்த்திகை விரதம்: ஐயப்ப பக்தர்கள் வேண்டுகோள்
நவ.17 முதல் கார்த்திகை விரதம்: ஐயப்ப பக்தர்கள் வேண்டுகோள்
ADDED : நவ 14, 2025 11:04 PM
திருவாடானை: கார்த்திகை மாதம் முதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கி காலில் செருப்பு இல்லாமல் நடப்பதால் ரோட்டில் மக்கள் எச்சில் துப்ப வேண்டாம் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து பெண்கள் வீட்டு வாசல்களில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தெய்வ வழிபாடுகள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1 முதல் அதிகாலையில் இஷ்ட தெய்வங்களை வணங்கி கோயில்களுக்கு சென்று குருசுவாமி முன்னிலையில் மாலை அணிந்து விரதத்தை துவக்குவார்கள்.
நவ.,17ல் மாதப்பிறப்பை தொடர்ந்து காலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க, தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மாலை அணிந்து விரதம் துவங்க உள்ளனர். திருவாடானை, தொண்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காலில் செருப்பு அணியாமல் நடப்பார்கள்.
எனவே மக்கள் ரோட்டில் எச்சில் துப்புவது, ரோட்டோரங்களில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் கூறியதாவது:
ரோட்டில் எச்சில் துப்புவதால் அருவருப்பை ஏற்படுத்துகிறது. நோய் பரவலுக்கும் ஆளாக நேரிடும். ரோட்டில் எச்சில் துப்பும் போது மிதிப்பவருக்கு எளிதில் தொற்று நோய் பரவுகின்றன.
பொது இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
மீறுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என்றனர்.

