ADDED : ஏப் 19, 2026 10:39 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாத கார்த்திகை வழிபாடு நடந்தது.கோயில் வளாகத்தில் விளக்குபூஜையில் பெண்கள் கலந்து கொண்டு 108 போற்றி மந்திரங்கள் கூறி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முருகனுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது. வெள்ளி கவசத்தில் முருகன் காட்சி அளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை வள்ளி தேவசேனா காத்திகை குழுவினர் செய்தனர். முதுகுளத்துார், கமுதி பகுதியிலுள்ள முருகன் கோயிலில் கிருத்திகை சிறப்புபூஜைகள் நடந்தது.
