/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
/
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
ADDED : செப் 13, 2025 03:44 AM

ராமநாதபுரம்: மாத கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், பூஜை வழிபாடு, அன்னதானம் நடந்தது.
நேற்று ஆவணி கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே குமரய்யா கோயிலில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது.
இதே போல ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், முகவை ஊருணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், வெளிப்பட்டனம் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலதண்டயுத சுவாமி கோயில் மற்றும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள வினைதீர்க்கும் வேலவர் கோயிலில் அபிேஷகம், பூஜைகள் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் நீச்சல் குளம் அருகில் உள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் அபிேஷகம், பூஜைகள், அன்னதானத்தில் பக்தர்கள் பங்கேற்றனர்.