/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காசியையும் ராமேஸ்வரத்தையும் பிரிக்க முடியாது பிரதமர் மோடியால் பாரதியின் கனவு நிறைவேறியுள்ளது துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் புகழாரம்
/
காசியையும் ராமேஸ்வரத்தையும் பிரிக்க முடியாது பிரதமர் மோடியால் பாரதியின் கனவு நிறைவேறியுள்ளது துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் புகழாரம்
காசியையும் ராமேஸ்வரத்தையும் பிரிக்க முடியாது பிரதமர் மோடியால் பாரதியின் கனவு நிறைவேறியுள்ளது துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் புகழாரம்
காசியையும் ராமேஸ்வரத்தையும் பிரிக்க முடியாது பிரதமர் மோடியால் பாரதியின் கனவு நிறைவேறியுள்ளது துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் புகழாரம்
ADDED : டிச 31, 2025 05:08 AM

ராமேஸ்வரம்: ''காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய தேசம் குறித்து மகாகவி பாரதியார் கண்ட கனவு பிரதமர் மோடியின் காசி, தமிழ் சங்கமம் மூலம் நிறைவேறியுள்ளது,'' என, ராமேஸ்வரத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்திற்கும், காசிக்கும் உள்ள கலாசார தொடர்பை வலியுறுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் விழா நடத்தப் படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.0 விழா டிச., 2 முதல் 15 வரை நடந்தது.
நிறைவு விழா இதன் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நேற்று துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கவர்னர் ரவி, எம்.பி., தர்மர், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, பனாரஸ் ஹிந்து பல்கலை துணைவேந்தர் அஜித்குமார் சதுர்வேதி, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்த தேசம் வாழ்க என சொல்வதால் நாம் தமிழுக்கு எதிரானவர்களா. தொன்மையான காசி நகரமும், உலகின் தொன்மையான தமிழ் மொழியும் இணைவது காசி தமிழ் சங்கமம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
காசியும், ராமேஸ்வரமும் பிரிக்க முடியாத புண்ணிய நகரங்கள். அதனால் தான் காசி தமிழ் சங்கமம் 4.0 காசியில் துவங்கி ராமேஸ்வரத்தில் முடிகிறது. காசி பாரதத்தின் பண்பாட்டு மையமாக உள்ளது. தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கும் தளத்தில் கபீரின் பக்தி பாடல்களும் ஒலிக்கிறது.
மகாகவி பாரதி முகலாய மன்னர்கள் காசி கோயிலை அழித்த போது தமிழகத்தில் இருந்தும், பாண்டிய நாட்டிலும் இருந்தும் காசியை காக்க போர் புரிய சென்றனர்.
எட்டயபுரத்தில் இருந்து சென்ற மகாகவி பாரதி காசி அரசவையை அலங்கரித்துள்ளார். அவர் தேசத்தை பற்றி மட்டும் சிந்தித்துள்ளார். இந்திய தேசம் குறித்து பாரதியார் கண்ட கனவு பிரதமர் மோடி மூலம் நிறைவேறி வருகிறது. தமிழ் கலாசாரம் குறித்து பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசினார். காசியில் உள்ள கோயிலுக்கு இக்கட்டான சூழல் வந்த போது தமிழக நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தினமும் பூஜைபொருட்களை எடுத்து சென்றனர். அவர்களுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் காசியில் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. உரிய ஆவணங்களை
தொடர்ச்சி ௪ம் பக்கம்

