/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இந்திய- - இலங்கை பாதுகாப்பில் நடந்த கச்சத்தீவு திருவிழா: 7000 பேர் பங்கேற்பு
/
இந்திய- - இலங்கை பாதுகாப்பில் நடந்த கச்சத்தீவு திருவிழா: 7000 பேர் பங்கேற்பு
இந்திய- - இலங்கை பாதுகாப்பில் நடந்த கச்சத்தீவு திருவிழா: 7000 பேர் பங்கேற்பு
இந்திய- - இலங்கை பாதுகாப்பில் நடந்த கச்சத்தீவு திருவிழா: 7000 பேர் பங்கேற்பு
ADDED : மார் 16, 2025 02:06 AM

ராமேஸ்வரம்:இந்திய- இலங்கை கடற்படையினர் பாதுகாப்புடன் நடந்த கச்சத்தீவு சர்ச் திருவிழாவில் இரு நாட்டை சேர்ந்த 7000 பேர் பங்கேற்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 21 கி.மீ.,ல் பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு சர்ச் வளாகத்தில் சிலுவைப்பாதை திருப்பலி பூஜை நடந்தது.
நேற்று காலை சிவகங்கை, யாழ்பாணம் மறைமாவட்ட பிஷப்கள் லுார்து ஆனந்தம், ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலி பூஜை நடத்தினர். சிங்கள மொழியில் கொழும்பு பாதிரியார் சிஷ்வாண்தே பூஜை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இருநாட்டு பாதிரியார்கள், பக்தர்களின் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
பின் திருவிழா கொடி இறக்கியதும் விழா நிறைவு பெற்றது. விழாவில் இந்திய, இலங்கை பக்தர்கள் 7000 பேர் பங்கேற்றனர். இருநாட்டு கடற்படை, கடலோர காவல்படையினர் கப்பலில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்திய பக்தர்கள் அவர்கள் வந்த படகில் கச்சத்தீவில் இருந்து புறப்பட்டு நேற்று மதியம் 12:30 முதல் இரவு 7:00 மணி வரை ராமேஸ்வரம் வந்தனர்.
பக்தர்கள் அவதி
கச்சத்தீவில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு அவதிப்பட்டனர்.
அங்கு இறங்கவும், மீண்டும் படகில் ஏறி செல்லவும் இரு சிறிய மிதவை பாலம் மட்டுமே இருந்தது. சுட்டெரித்த வெயிலால் கச்சத்தீவில் ஒதுங்கி நிற்க கூட இடமின்றி பக்தர்கள், குழந்தைகள் சிரமப்பட்டனர்.
'எல்லை தாண்ட விடமாட்டோம்'
கச்சத்தீவு விழாவில் பங்கேற்ற இலங்கை மீன்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறுகையில், ''இந்திய மீனவர்கள் இழு வலையில் எங்கள் எல்லைக்குள் மீன்பிடிப்பதால் மீன்வளம் முற்றிலும் அழிந்து விட்டது.
''மேலும் எங்கள் மீனவர்கள் வலைகள் சேதமடைந்து வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்களை மீட்டெடுக்க வேண்டிய சூழல் உள்ளதால் இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம்'' என்றார்.